எங்களை பற்றி

மேல் மாகாண சுற்றுலா சபை, 1994 இலக்கம் 03 உடைய அதிகாரத்தின் கீழ் அமைய பெற்றுள்ள சட்டரீதியான நிறுவனமாகும். மாகாணத்தினுள் சுற்றுலா துறையை செயற்திறன் மிக்கதாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு மேல் மாகாண சுற்றுலா சபை அமைக்கப்பட்டுள்ளது.

3782 சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கொண்ட மேல் மாகாணத்தினுள் சுற்றுலா பிரதேசமாக குறிப்பிட்டுள்ள பல்வேறுப்பட்ட சிறப்பு ஸ்தலங்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தினுள் பொருளாதார ரீதியாக நிர்வாக பிராந்தியமாக அமையப் பெற்றிருப்பதுடன், மேல் மாகாணத்தினுள் கொழும்பு துறைமுகம், சர்வதேச விமான நிலையம் என்பன அமைக்கப்பட்டிருத்தலானது சுற்றுலா நடவடிக்கைகளுக்கு மிக முக்கியமாக காணப்படுகின்றன.

நோக்கம

“மேல் மாகாணமானது கவர்ச்சிகரமான சுற்றுலா ஸ்தலமாகும்”

குறிக்கோள்

“உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்தி, மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா துறையில் தொழிற்திறன் உயர்த்துதல் மற்றும் சேவை தரத்தை மேம்படுத்துதல் மூலம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், சுற்றுலா துறை ஆர்வலர்கள் மற்றும் மக்களுக்கு நட்புறவானதும், செயற்திறன் மிக்கதும், நிலையான மற்றும் உயர் தரத்துடன் கூடிய சேவை வழங்குவதன் மூலம் மேல் மாகாணத்தை கவர்ச்சிகரமான சுற்றுலா தலமாக உருவாக்க முடியும்.”

முதன்மையானவை
 • உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
 • சுற்றுலா தலங்கள் மற்றும் பயண இடங்கள்
 • தொழிற்திறன் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்தல்
 • நிறுவனத்தின் வினைத்திறன்
மேல் மாகாணத்தில் சுற்றுலா மேம்பாட்டு கொள்கைகள்
 • பயண இலக்கு முகாமைத்துவத்திற்கான சமூக அடிப்படையிலான அமைப்புகளை நிறுவுதல் மற்றும் மேம்படுத்தல்.
 • பயிற்சி நிகழ்ச்சிகளில் பெண்களின் பங்கை அதிகரித்தல்
 • விளம்பர ஊடகங்களின் கருத்துக்களை அகத்துறிஞ்சல்.
 • ஐந்து ஆண்டு மூலோபாயத் திட்டத்தின் படி வருடாந்த திட்டத்தைத் தயாரித்தல்.
 • சுற்றுலா சேவை நிறுவனங்களுடன் கலந்துகொண்டு மேம்படுத்தல்.
 • மாகாண அரசாங்க நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை அதிகப்படுத்துதல்.
 • நிலையான பணிக்குழுவை பயிற்றுவித்தல் மற்றும் மதிப்பிடல்
 • தொடர்ச்சியான பயிற்சி மற்றும் தெளிவூட்டல்.
 • வருடாந்தம் உரிமைப்பத்திரத்தை புதிப்பித்தல்.